INTJ

உணர்வு

இமயம் டிவி

இமயம் டிவி தினந்தோறும் விடியோ விசன் வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 10 .30 11.00
சவுதி 8:00 P.M 8:30 P.M
கத்தார் 8:00 P.M 8:30 P.M
குவைத் 8:00 P.M 8:30 P.M
பஹ்ரைன் 8:00 P.M 8:30 P.M
அமீரகம் 9:00 P.M 9:30 P.M

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@onlineintj.com என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 33,777
  • Visitors:
  • Today: 24
    This week: 138

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது இணைய தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஏக இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

தானே புயலுக்கு நிவாரணத்தில் ஈடுபடுகிறோம் என கூறிக் கொண்டு INTJ பெயரை பயன்படுத்தி சில கள்ளப்பேர்வழிகள் மோசடி செய்ய முயற்சிப்பதாக பல இடங்களில் இருந்து தகவல் வந்ததுள்ளது. இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை...
டிசம்பர் 25 ஐ பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாக அறிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு தேசியத் தலைவர் மாலிக் தரும் செய்தி....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) வின் தேசியத் தலைவர் மாலிக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பத்திரிகை அறிக்கை...
பாக்கர் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்த விஷயம் மின்னஞ்சல் வழியாக மீண்டும் விவாதிக்கப் படுகிறது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் அது குறித்து விளக்கும் அவசியம் ஏற்படுகிறது. பாக்கர் பகல் நேரத்தில் 4 அல்லது 5 மணி நேரம் பயணம் செய்தார் என்றும் இது தவறா என்றும் அவர் சார்பில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள்...

INTJ பெயரை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி! மக்களே எச்சரிக்கை

தானே புயலுக்கு நிவாரணத்தில் ஈடுபடுகிறோம் என கூறிக் கொண்டு INTJ பெயரை பயன்படுத்தி சில கள்ளப்பேர்வழிகள் மோசடி செய்ய முயற்சிப்பதாக பல இடங்களில் இருந்து தகவல் வந்ததுள்ளது. இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை கள்ளத்தனமாக டிரஸ்ட் பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ள சிலர் தான் இந்த அமைப்பின் பெயரின் பயன்படுத்தி மோசடி செய்வது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:



நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள் ; INTJ தேசியத் தலைவர் வேண்டுகோள்

கடலூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்கள் புயலால் தாக்கப்பட்டு கடும் சேதம் அடைந்துள்ளது. அங்கிருக்கும் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபட கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் இருக்கும் இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களுக்கு INTJ தேசியத்தலைவர் மாலிக் பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார். 




இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கோரிக்கை

சமுதாய மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதற்கான தீர்வுகளை எவ்வித இம்மை நோக்கமும் இன்றி செயல்பட்டு வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ். இந்த நிலையில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக்கோரி தமிழக முதலைமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.




டிசம்பர் 25 – பாலியல் வன்கொடுமை எதிப்பு தினம், INTJ தேசியத் தலைவர் அறிக்கை


டிசம்பர் 25 ஐ பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாக அறிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு தேசியத் தலைவர் மாலிக் தரும் செய்தி:

அன்பு கொள்கைச் சொந்தங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்,

சத்தியக் கொள்கையை ஏந்தி தவ்ஹீத் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நாம் நம் மார்க்கம் சொன்னதன் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்நியப் பெண்களுக்கு உள்ள வரைமுறைகள் குறித்து நாம் நன்கு அறிவோம். அதன் அடிப்படையில் நாம் வாழ்வது மட்டுமின்றி நம் சகோதரர்களின் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதற்கு நாம் உதவி புரிய வேண்டும்.

நம் அமைப்பைக் கள்ளத்தனமாக பதிவு செய்து வைத்திருக்கும் கூட்டத்தில் உள்ள அனைவருமே பாலியல் குற்றவாளிகள் என்கிற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அதிலும் குறிப்பாக நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் போலித்தனமாகப் பயன்படுத்தி தன்னை தலைவர் என்று சொல்லி வலம்வரும் பாக்கர் என்ற நபர், நம் சகோதர அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த போது பலமுறை பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதால் அவர் அந்த ஜமாஅத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக மட்டுமே நம்முடைய ஜமாஅத் பெயரில் ஒரு கள்ள இயக்கத்தைத் துவக்கி அதன் மூலம் பல தவறுகளைச் செய்து வருகின்றார்.

அதிலும் சமீபத்தில் அவர் செய்த பாலியல் சேட்டை இணைய தளங்களில் வெளியாகி மக்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதை அறிந்த சில பத்திரிகைகள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் பெண்களுடன் உல்லாசம் என தலைப்பிட்டு செய்திகள் எழுதி நம் ஜமாஅத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வந்தததன் அடிப்படையில் தான் அதற்கான மறுப்பு அறிக்கை அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப் பட்டது. ஆனாலும் சில பத்திரிகையாளர்கள் இதை பெட்டிச் செய்தியாகவும் கிசுகிசுவாகவும் தொடர்ந்து வெளியிட்டு வருவது நம் கவனத்துக்கு வருகின்றது.

எனவே நாம் இந்த டிசம்பர் 25 ஆம் தேதியை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாகக் கடைபிடித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் போலிகளை பத்திரிகையாளர்களுக்கும் நம் சமூகத்திற்கும் அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு நம் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இருக்கிறது.

எனவே டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நம் ஜமாஅத் நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள பத்திரிகை ஊடகத்துறை அலுவலர்களைச் சந்தித்து உண்மையான நம்முடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குறித்து விளக்கமளித்து விபச்சாரக் குற்றவாளிகளின் முகத்திரையைக் கிழித்து அன்றைய தினத்தை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாக கொண்டு செல்ல வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

மாலிக்
தேசியத் தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)

போலிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: தேசியத் தலைவர் அறிக்கை

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) வின் தேசியத் தலைவர் மாலிக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பத்திரிகை அறிக்கை:

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

கடந்த சில நாட்களாக இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் பெண்களுடன் சல்லாபம் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததை அறிகிறோம்.

ஆனால் அது தவறானதாகும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது எங்களின் அமைப்பாகும். அதன்பதிவு எண் 84/2010 ஆகும். கண்ணியமான சகோதரர்கள் நிறைந்துள்ள எங்கள் அமைப்பின் பெயரைக் கள்ளத்தனமாகப் பதிவு செய்துள்ள சில அயோக்கியர்கள் நாங்களும் இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத் என பொய் பிரகடனம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக அந்த அமைப்பில் மாநிலப்பொறுப்பில் இருப்பவர்கள் பெண்பித்தர்களாகவும், உதவி தேடி வரக்கூடிய அபலைப் பெண்களின்வாழ்வை நாசமாக்கியும், மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வரக்கூடிய சகோதரர்களின் குடும்பத்திற்குள் புகுந்து அவர்களின் மனைவியை சூறையாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் எங்களின் சகோதர அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கத்தில் இருந்து பண மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி வெளியேற்றப்படவர்கள் ஆவர்.

அதிலே பாக்கர் என்னும் நபர்தான் தற்போது நீங்கள் குறிப்பிடும் சல்லாபப் பேர்வழி ஆவார். அவருக்கும் எங்கள் அமைப்பான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பு இல்லை என்பதை இதன்மூலம் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுமட்டுமின்றி அவர்கள் மீது ஏகப்பட்ட பண மோசடிப் புகார் நாளொரு மேனியும் பொளுதொரு வண்ணமுமாக வந்து கொண்டிருக்கிறது என்பதையும் தங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.அத்தோடு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை அந்தக் கயவர்கள் எங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி!

இப்படிக்கு,
மாலிக்

தேசியத் தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்















பாக்கர் யாதவ்


நெல்லையில் நேற்றைய தினம் நடந்த யாதவர்கள் மாநாட்டில் சிரப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாக்கர் யாதவ் அவர்கள் வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சிகள் இன்னும் கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லா வகையறாக்களுக்கு கிடைக்கவில்லை போலும். பாக்கரின் அனைத்து தீமைகளுக்கும் முட்டுக் கொடுத்து நியாயப்படுத்தும் இவர்கள் ஏன் இன்னும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை பரப்பாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.


நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்காத சமுதாயமடா இது என மேடைகளில் அக்ரோஷமாய் வீர வசனம் பேசிய அதே பாக்கர் தான் பாக்கர் யாதவாக மாறி நிற்கிறார்.
 கொள்கைச் சகோதரர்கள் சிலர் இப்படியும் ஒருவர் கேவலமாக நடக்க முடியுமா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
நமக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
பாலியல் குற்றச்சாடு நிரூபனமானதற்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதன் பிறகு அதை உணர்ந்து நட்ந்து கொள்ள வேணும். மானம் உள்ள மக்கள் இப்படித்தான் நடப்பார்கள். ஆனால் பாக்கருக்கு அது கடுகளவும் இல்லை.
அன்னிய இளம் பெண்ணுடன் நள்ளிரவில் சொகுசு பேருந்தில் 14 மனி நேரம் பயணம் செய்வது குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறியவர் பாக்கர். அதை கூறியது மட்டுமின்றி அதை வீடியோவாகவும் வெளியிட்டவர் பாக்கர்.
அதாவது இனி மேலும் நான் இப்படித் தான் நடப்பேன். அன்னியப் பெண்களுடன் நான் தனித்து அருகருகே அமர்ந்து பயணம் செய்வேன். நான் மட்டுமின்றி என்னுடன் இருப்பவர்களும் அப்படித் தான் நடப்பார்கள் என்பது இதன் கருத்து.
நாங்கள் கன்னியமானவர்கள். எங்கள் குடும்பத்துப் பெண்கள் கண்ணியமானவர்கள். உன்னுடன் சேர்ந்தால் எங்களையும் எங்கள் குடும்பப் பெண்களையும் மக்கள் தப்பாக நினைப்பார்கள்; கேலி செய்வார்கள் என்று கூறி கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லாக்கள் கூறி இருந்தால் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதர்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதையும் நியாயப்படுத்தி மெயில் போடுபவர்கள் இருக்கும் வரை இது போல் பாக்கர் யாதவ் நடக்காவிட்டால் தான் ஆச்சரியம்.
பள்ளிவாசல் வகைக்காக 50 ஆயிரத்தை நஸ்ருத்தீனிடம் வாங்கி விட்டு அதை ஏப்பம் விட்டார் என பாதிக்கப்பட்ட நஸ்ருத்தீன் குமுறினார். நியாயம் கேட்டார். அப்போதாவது யாராவது தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்கி இருந்தால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமாவது அவருக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். அப்படியும் மேற்படி சீடர்கள் செய்யவில்லை.
இன்னும் என்னென்ன செய்தாலும் நமக்கு முட்டுக் கொடுக்க நம்மைப் போன்ற கேடு கெட்டவர்கள் தயாராக காத்திருக்கிறார்கள் என்ற துணிச்சல் காரணமாக இப்படி அவரால் நடக்க முடிகிறது.
இந்து இயக்கத்தினரே முகம் சுளித்து பிரசுரம் வெளியிடும் அளவுக்கு  சமுதாயத்துக்கு அவமானத்துக்கு மேல் அவமானத்தி ஏற்படுத்தி வருகிறது இந்தக் கும்பல்.

ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா?


போர்ஜரிப் பேர்வழியின் கேள்வி.
மதுரை ஆதீனத்தின் கடிதத்தை தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளம் வெளியிட்டது. அதன் எழுத்துக்களில் முதல் பகுதி ஒரு வகையான எழுத்திலும் இறுதிப் பகுதி வேறு வகையான எழுத்திலும் இருப்பதாலும் அதன் இறுதியில் ஆதீனத்தின் கையெழுத்து இல்லாததாலும் இதில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதாவது வருத்தம் தெரிவிக்கும் பகுதி நாமாக எழுதிக் கொண்டது போல் அந்தச் சந்தேகம் அமைந்துள்ளது. [break]

இந்தக் கேள்வி சரிதான். ஆனால் கேட்பவன் தான் சரி இல்லை. 

ஏனெனில் அவனைப் பற்றியே பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நீ யார் என்று கேட்கும் போது நான் இன்னார் என் டஹ்நெஎன் தந்தை இன்னார் என்று சொல்லக் கூட முடியாத ஒருவர் - மானம் ரோஷம் இருந்தால் அது போகக் கூடிய வகையில் கேள்வி கேட்ட பின்பும் தான் யார் என்பதைச் சொல்லாமல் மறைக்கும் பலவேசத்தார் - ஒவ்வொரு பெயரில் ஒளிந்து கொண்டு தன்னைத் தானே பாராட்டி எழுதிக் கொள்வதாக சந்தேகிக்கப்படும் பேர்வழி - இந்தச் சந்தேகத்தை எழுப்பி இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது. தன்னைப் பற்றி எழும் பயங்கரமான சந்தேகத்தை போக்க கடமைப் பட்டவர் அதை செய்யாமல் செய்ய முடியாமல் சந்தேகம் எழுப்புகிறார். மார்க்க அடிப்படையில் இது அவசியம் என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் தன்னை அடையாளம் காட்ட மறுப்பவர் இப்படிக் கேட்கிறார். உனக்கு பல முகமூடி உண்டு என்று குற்றம் சாட்டிய பிறகும் தன்னை வெளிப்படுத்த மறுப்பவர் யாருடைய கையெழுத்து என்று சந்தேகம் எழுப்புகிறார். 

இது தான் கேவலமாக உள்ளது. 

மதுரை ஆதீனத்தின் கடிதத்தை அவரது உதவியாளர் தான் எழுதினார். அது தான் கடிதத்தின் முதல் பகுதி. அதில் வருத்தம் தெரிவிக்கும் வாசகம் இல்லை. எனவே இதை ஏற்க முடியாது என்று மாவட்ட நிர்வாகிகள் உறுதியாகக் கூறினர். அதிகாரிகளும் வற்புறுத்தினார்கள். இதன் பின்னர் ஆதீனமே அந்தப் பேப்பரை வாங்கி வருத்தம் தெரிவிக்கும் வாசகத்தை தன் கைப்பட எழுதினார்  அதை அவரே வாசித்தும் காட்டினார். அவர் எழுதியதும் அவர் வாசித்துக் காட்டியதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. வீடியோ ஆதாரம் இருப்பதால் அவரது கையெழுத்து இல்லாததை மாவட்ட நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அவர் ஆசி வழங்கி பால் வழங்கியதை நம் சகோதரர்கள் அருந்த மறுத்தனர். அது தவறு என்பதையும் விளக்கினார்கள். அவருக்கு தஃவாவும் செய்தனர். 

இப்போது கடிதம் அவர் எழுதியது தானா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டதால் அந்தக் காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ஃபித்னா பன்னாமல் இருக்க மாட்டார்கள். அப்போது தேவையான விஷயங்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.

ஆதீனம் கடிதம் வாசிக்கும் வீடியோ

முழு விபரம் உணர்வில் காண்க

முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படும் போது தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?


மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இடச் சென்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களூம் சிறையில் அடைப்பு! அனைத்து முஸ்லிம்கள் கொந்தளிப்பு! தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்த்தது! என்று பலவாறாக மின்னஞ்சல்கள் நேற்று முழுவதும் பரப்பப்பட்டன.[break]
ஒவ்வொருவரும் ஒரு போராட்ட வழிமுறையைக் கையில் எடுப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டத்தைத் தான் மற்றவர்களும் செய்ய வேண்டும் என்பது நமது நிலைபாடு இல்லை.
அந்த வகையில் பாக்கர் ஜமாஅத்தினர் ஒரு போராட்டம் நடத்தினார்கள்.
220 பேர் அதில் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வது வழக்கமான நடைமுறை தான். இதிலும் பிரச்சனை இல்லை.
பெரும்பாலும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மாலை நேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள். சில நேரத்தில் கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் உண்டு. சில மாதங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமுமுக வைத் துவக்கிய ஆரம்ப நேரத்தில் கோவையில் பூட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தினோம். நானும் ஹைதர் அலியும் சுமார் 800 சகோதரர்கள் (என்று நினைக்கிறேன்) கைது செய்யப்பட்டோம். சிறையில் அடைக்கப்பட்டோம்.
இது போல் கைது செய்யப்படும் போது எவ்வாறு தலைவர்கள் நடக்கிறார்கள் என்பதை வைத்துத் தான் சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்படும்.
ஆனால் பாக்கர் கூட்டம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் கேவலப்படுத்தி அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
போராட்டக் களத்தில் கைது செய்யப்படும் போது சமுதாயத்தின் மானம் காக்கும் வகையில் வீரியத்தை இழந்து விடாமல் இருக்க சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும், சில முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கைது செய்வது உறுதியானால் பெண்களை அனுப்பிவிடத் தயாராக இருப்பதாக காவல் துறையினர் அறிவிப்பார்கள். போராடும் இயக்கத்தினர் அதை ஏற்று பெண்களை அனுப்பி விட்டு ஆண்கள் மட்டும் கைதாவார்கள். வீரியம் மிக்க அனைத்து இயக்கங்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். கோவையில் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போதும் அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் கைது செய்யப்பட்ட போதும் இதே வழிமுறையைத் தான் கையாண்டு வந்துள்ளோம்.
அது போல் பெண்களை அனுப்பி விடுங்கள் என்று காவல் துறை இந்த வீராதி வீரர்களிடம் சொன்னது. ஆனால் பெண்களைக் கேடயமாக்கிக் கொண்டு எப்படியாவது சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கும் கேவலத்தைச் செய்தார்கள்.
அதாவது பெண்களையும் கைது செய்யச் சொன்னால் கைது செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று கணக்குப் போடும் ஈனத்தனமான செயலைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தைக் கோழைச் சமுதாமாகச் சித்தரித்தார்கள்.
எந்த ஒரு போராட்டமானாலும் அதை நாம் தான் நமது பொறுப்பில் நடத்துகிறோம். எனவே கைது செய்யப்படும் போது பிற இயக்கத் தலைவர்களின் உதவியை நாடாமல் மானம் காப்பது வீரியமிக்க இயக்கத்தவரின் தார்மீகக் கடமையாகும். ஆனால் இவர்கல் என்ன செய்தார்கள்.
காவல் துறையில் கெஞ்சினார்கள். அனைத்து முஸ்லிம் இயக்கங்க்களின் தலைவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு எப்படியாவது எங்களைக் கைது செய்யாமல் இருக்க உதவுங்கள் என்று கெஞ்சினார்கள். நம்மைத் தவிர அனைவரிடமும் கெஞ்சினார்கள். தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் இவர்களுக்கு உதவ் விரும்பி முயற்சித்தாலும் இவர்களுக்கு அரசுடன் தொடர்பு இல்லாததால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்களை முனீர் தொடர்பு கொண்டு உதவி தேடினார். அதிகாரிகள் அனைவரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பஷீரிடம் கூறி விட்டனர்.
இதன் பின்னர் ஆற்காடு வீராசாமியை அவர் முதலில் தொடர்பு கொண்டு பின்னர் முதல்வர் அலுவகத்திலும் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார். இடைத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் விளக்கியதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது. இது குறித்து தேசிய லீக் தலைவர் என் கருத்தைக் கேட்ட போதுசமுதாயத்தைக் கேவ்பலப்படுத்தி விட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். காவல் துறையில் கெஞ்சக் கூடாது. பிற இயக்கங்களின் உதவியை கோரக் கூடாது. பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது இந்த அனைத்து நெறிமுறைகளையும் மீறிய இவர்களை நினத்தால் அருவருப்பாக உள்ளது என்பது தான் என் கருத்து என்று தெரிவித்தேன்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்குத் தயாராக இல்லாத் கோழைகள் ஏன் இத்தகைய போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்? வீரியத்துடன் சிறை செல்லத் தவறியதற்காகவும், மானம் கெட்டு கெஞ்சிக் கூத்தாடியதற்காகவும், பெண்களைக் கேட்யமாக பயன்படுத்தியதற்காகவும் சமுதாயத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு பதிலாக அவர்களின் இழிசெயலை நியாயப்படுத்த கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?
வீரியமாகப் போராடுவார்கள்; கைது என்றால் காலில் விழுந்து விடுவார்கள் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களைப் பற்றியும் அரசாங்கம் மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தி விட்டனர்.
சிறை செல்லத் தயாராக இருக்கும் சமுதாயத்தைத் தான் நாம் உருவாக்கினோம். அது தான் ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தது.
இவர்கள் துணிவுடனும், வீரத்துடனும் முதலில் சிறை செல்லத் தயாராகி இருந்தால் மற்ற இயக்கங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இனியாவது வாய்சொல் வீரம் பேசுவதை நிறுத்திக் கொண்டு சிறை செல்லத் தயாராக இருந்தால் தடை மீறும் போரட்டத்தை நடத்தட்டும். இல்லாவிட்டால் தமது சக்திக்கு ஏற்ப போராட்டக் களத்தை மாற்றிக் கொள்ளட்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஓடோடிச் செல்லவில்லை என்றால் அவர்கள் கோழைகளாகி சமுதாயத்தின் மானத்துடன் விளையாடியதால் தான். அவர்கள் சிறை செல்லத் தயார் நிலையில் இருந்து அதிகாரிகளிடம் கெஞ்சாமல் பிற இயக்கங்களிடம் அழுது வடியமால் இருந்திருந்தால் தான் இவ்வாறு கேட்க உரிமை உள்ளது.
எங்களை விடுவிக்க அனைவரும் ஓடி வந்த்னர். தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஓடி வரவில்லை என்று கேட்பதை விட அருவருப்பான கேள்வி வேறு எதுவும் இல்லை.
பெண்கள் வீரமாக நாங்களும் சிறை செல்வோம் என்று முழங்கினார்களே தவிர கேடயமாகப் பயன்படவில்லை என்று இப்போது சமாளிக்கப் பார்க்கின்றனர். எல்லா இயக்கங்களின் போராட்டங்களிலும் பெண்கள் வீரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் பேசுவார்கள். தலைவர்கள் இதைத் தான் விரும்புகிறார்கள் என்று அவர்கள் கருதுவதே இதன் காரணம். நாம் உட்பட பல இயக்கங்கள் இது போன்ற நிலையைச் சந்தித்துள்ளோம். ஆனால் சிறை செல்வது உறுதி என்ற நிலை வந்தால் பெண்களுக்கு உரிய கட்டளையைப் பிறப்பித்து விட்டு ஆண்கள் மட்டுமே சிறையை எதிர்கொள்வது தான் நல்ல தலைமையின் நடவடிக்கையாக் இருக்க வேண்டும்.
கோவையில் நாங்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்ட போது பெண்கள் இத்தகைய உணர்வைத் தான் காட்டினார்கள். ஆனால் அதை நாம் ஏற்கவில்லை.

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்


பாக்கர் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்த விஷயம் மின்னஞ்சல் வழியாக மீண்டும் விவாதிக்கப் படுகிறது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் அது குறித்து விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

பாக்கர் பகல் நேரத்தில் 4 அல்லது 5 மணி நேரம் பயணம் செய்தார் என்றும் இது தவறா என்றும் அவர் சார்பில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள்.

அது குறித்த உண்மைகள் வருமாறு:
1-பாக்கர் பயணம் செய்தது பகலில் அல்ல. இரவில் தான். பயணம் செய்த நேரம் 10 மணி நேரத்துக்கும் அதிகமாகும். 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் விரைவு வாகனம் இன்னும் இந்தியாவில் அறிமுகமாகவில்லை.
2- ரதிமீனா பேருந்து ஆங்காங்கே நிறுத்தி மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து அல்ல. அப்படி இருந்தால் விளக்குகளை எறிய விட்டு பயணம் செய்வார்கள். முன் பதிவு செய்தவர்களை மட்டுமே ஏற்றிச் செல்வதால் புறப்பட்ட உடன் விளக்கு அணைக்கப்பட்டு விடும்.
3-அந்நியப் பெண் தற்செயலாக பாக்கர் அருகில் அமர வைக்கப்படவில்லை. மாறாக அந்தப் பெண் பாக்கரால் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறார். பாக்கர் தனது காரை எடுத்துச் சென்று பேருந்து நில்லையத்தில் இருந்து அழைத்து வந்தார்.
4- அந்தப் பெண்ணுக்கும் பாக்கருக்கும் சேர்த்து பாக்கரின் ஊழியர் மைதீன் தான் பாக்கர் செலவில் டிக்கெட் எடுத்தர்.
5- வீராணம் நிகழ்ச்சிக்கு செல்லும் போது அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றார். அந்தப் பெண் கோவில்பட்டியில் இறக்கி விட்டார்.
6- அவர் மங்கலான வெளிச்சத்தில் சில்மிஷம் செய்ததை அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு சகோதரர் பார்த்து விட்டு எழுத்து மூலம் புகார் செய்தார்.
பாக்கரை நேரில் விசாரித்த் போது தான் ஒன்றும் செய்யவில்லை என்றும் அந்தப் பெண் தான் தன்னிடம் வரம்பு மீறி நடந்ததாகவும் ஒப்புக் கொண்டார். இன்னும் பல விஷயங்க்ளையும் ஒப்புக் கொண்டார்.
உண்மைக்கு மாற்றமாக மின்னஞ்சலில் பொய்களைப் பரப்பினால் முழு விபரத்தையும் ஆதாரத்துடன் சொல்லும் நிலை ஏற்படும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
ஒரு பெண் தன்னந்தனியாக பயணம் செய்வது வேறு. இது வேறு.
அன்னிய் ஆணுடன்
ஏற்கனவே அறிமுகமான ஆணுடன்
முன் கூட்டியே திட்டமிட்டு
10 மணி நேரம்
கும்மிருட்டில்
அருகருகே ஒட்டி உரசிக் கொண்டு
பயணம் செய்வது வேறு
இது பயணம் செய்வது தொடர்பான பிரச்ச்னை அல்ல. அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது தொடர்பானது.
இந்தக் கேவலத்தை நியாயப்படுத்தி யாராவது பேசினால் இதை நீங்கள் உங்கள் விஷயத்தில் கடைப்பிடிப்பீர்களா? அல்லது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் இனி அப்படி நட்ப்பதற்கு அனுமதிப்பீர்களா? என்பது தான் கேள்வி.
மார்க்கத்தில் அப்பட்டமாக அறியப்பட்ட ஒரு அசிங்கத்தை நியாயப்படுத்த முயன்றால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இது பற்றி முழு
 விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும் 

INTJ திரட்டி

Syndicate content